சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: உலக கன்னட மாநாட்டில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ராய்!!

கர்நாடக மாநிலம் பெல்காமில் இரண்டாவது உலக கன்னட மாநாடு நடந்து வருகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசு.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த விழாவில் விஸ்வ கன்னட சம்மேளன விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவில் அவர் பங்கேற்க பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்ற குழப்பம் நிலவியது.
இந்நிலையில், இன்று துவங்கிய உலக கன்னட மாநாட்டில் பங்கேற்றார் ஐஸ்வர்யா ராய். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்றது பற்றி அவர் கூறுகையில், "உலக கன்னட மாநாட்டில் பங்கேற்க எனக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த விழாவை நான் ஏன் புறக்கணிக்க வேண்டும். நானும் இந்த மாநிலத்தில்தான் பிறந்தேன். அனைத்து மொழிகளையும் நேசிக்கிறேன். அதே நேரம் பிறந்த மாநிலத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்பதை விரும்புகிறேன்..", என்றார்.


Click it and Unblock the Notifications











