'களவாணி' ஹெலன்!

மலையாளத்தில் கலாபவன் மணி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அபூர்வா 18 இயர்ஸ் ஓல்ட். இப்படத்தில்தான் ஹெலன் நடித்துள்ளார்.
இந்தப் படம் இன்னும் முடியாத நிலையில் தமிழ் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.
பசங்க படத்தின் நாயகன் விமல் நாயகனாக நடிக்கும் களவாணி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஹெலன்.
கிரீடம் பட இயக்குநர் விஜய்யின் உதவியாளர் சற்குணம் இயக்குகிறார். சரண்யா, இளவரசு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். செப்டம்பர் 4ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
ஏற்கனவே ஏகப்பட்ட மலையாள நடிகைகளால் திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழில் தனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹெலன்.
தமிழ் எல்லோருக்கும் சொர்க்கம், ஹெலனுக்கும் அது 'ஹெவன்' ஆக அமையட்டும்!
Comments


Click it and Unblock the Notifications