நடிகைகள் 'வாயைக்கட்ட' வேண்டும்-அசின்

By Staff

Asin
நடிகைகள் தங்கள் வாயைக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சினிமா உலகில் நிலைத்திருக்க வேண்டும் என்கிறார் நடிகை அசின்.

மலையாளம், தெலுங்கு, தமிழ் என வலம் வந்து இப்போது பாலிவுட்டில் நிலை கொண்டுள்ள அசினைச் சுற்றிலும் ஏக வதந்திகள், பரபரப்பு செய்திகள். ஆனால் அவர் தொடர்ந்து தனது வேலையில் மட்டுமே கவனமாக உள்ளார்.

தன்னைச் சுற்றிய பரபரப்புகளுக்கு அவர் உடனுக்குடன் பதிலளிப்பதில்லை. அமைதி காக்கிறார். ஏன் இப்படி என்று கேட்டதற்கு, "பெண்களுக்கு நாவடக்கம் முக்கியம். குறிப்பாக நடிகைகள் வாயைக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

கண்டதையெல்லாம் பேசக்கூடாது. எனக்கு கோபமூட்டும் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. ஆவேசமாக கத்த வேண்டும் என்றுதான் எனக்கும் தோன்றும். ஆனால் அடுத்த நிமிடமே கோபத்தையும் நாவையும் அடக்குகிறேன். நடிகைகள் கோபப்பட்டு ஏதேனும் பேசினால் எதிர்காலமே இல்லாமல் செய்து விடுவார்கள். எனவே கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல கண்டதையும் சாப்பிடக்கூடாது. இதிலும் நாவை அடக்க வேண்டும். ருசியான உணவுகளைப் பார்த்தால் நாவில் நீர் ஊறும். ஆனால் கண்டதையும் சாப்பிட்டால் உடலின் எடை கூடிவிடும். பின்னர் பீல்ட் அவுட் ஆவதைத்தவிர வேறு வழியில்லை.

எனவேதான் நானும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். மேக்கப் போட ஆரம்பித்தால் உடல் அழகையாவது காக்க வேண்டும்..." என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X