ஸ்ரீதேவி அழைப்பை நிராகரிக்கவில்லை-மறுக்கிறார் ஆசின்

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் தனது படத்தில் நடிக்குமாறு ஆசினை அணுகியதாகவும், ஆனால் அதை ஆசின் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ஆசின் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், ஸ்ரீதேவி என்னிடம் கேட்டால் என்னால் நிச்சயம் மறுக்க முடியாது.
ஸ்ரீதேவி, போணிஜி ஆகியோர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். போணிஜி என்னிடம் தனது படத்தில் நடிக்குமாறு கோரி அணுகியதாகவும், நான் மறுத்து விட்டதாகவும் வந்த செய்தியைப் படித்தேன். அதில் உண்மை இல்லை. நிச்சயம் நான் ஸ்ரீதேவிக்கு மறுப்பு சொல்ல முடியாது என்றார்.
போணி கபூர் கூறுகையில், தற்போது பி பாசிட்டிவ், மிஸ்டர் இந்தியா 2 ஆகிய படங்களுக்காக நாங்கள் பிசியாக உள்ளோம். ஸ்கிரிப்ட்டை முடிக்காமல் நான் எந்த நடிகர், நடிகையையும் அணுகுவதில்லை. எனவே ஸ்கிரிப்ட்டை முடித்த பிறகே அதில் நடிக்கும் நடிகர், நடிகை யார் என்பது தெரிய வரும் என்றார் போணி.
மும்பையில் ஸ்ரீதேவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறார் ஆசின் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











