twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்யாஞ்சலி-வேலு மனுக்களை ஒன்றாக விசாரிக்க உத்தரவு

    By Chakra
    |

    நடிகை பாக்யாஞ்சலி, வில்லன் நடிகர் வேலு ஆகியோர் மனுக்களை ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் வேலு மீது பாக்கியாஞ்சலியும், பாக்யாஞ்சலி மீது வேலுவும் மாறி மாறி புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்த வழக்கின் காரணமாக இதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த இந்த இரு புதுமுக நடிகர்களும் படு பிரபலமாகிவிட்டனர் (இதுபற்றி தனியாக ஒரு விசாரணை மேற்கொண்டால் கூட தேவலை...!).

    கொஞ்ச நாள் அமைதியாக இருந்த இவர்கள் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    பாக்கியாஞ்சலி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

    நான், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து சினிமாவில் நடித்துவிட்டு செல்கிறேன். 'உன்னையே காதலிப்பேன்' என்ற படத்தில் கதாநாயகியாக நான் நடித்தபோது, அதில் வில்லனாக நடித்த அந்தப் படத்தின் துணை தயாரிப்பாளர் வேலு அறிமுகமானார்.

    நெருக்கமாக இருந்தோம்...

    என்னுடன், அவர் நட்பை வளர்த்துக்கொண்டார். நானும், அவருடனும், அவரது குடும்பத்தினருடனும் நட்புடன் பழகினேன். பின்னர் சில நாட்களில் வேலுவின் நட்பு திசை மாறியதால், அவருடனான நட்பை விட்டு விலகிச்சென்றேன். ஆனால் அவர், தன்னுடன் ஓட்டல், பார்க், தியேட்டர் ஆகிய இடங்களுக்கு வந்து நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்தினார்.

    இது மிகவும் மோசமாகவே, எனது பெற்றோரிடமும், வேலுவின் பெற்றோரிடமும் புகார் செய்தேன். போலீசிடம் புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட வேலுவின் பெற்றோர், வேலுவுக்கு ஒத்துழைக்கும்படி கூறினர்.

    மிரட்டி கையெழுத்து வாங்கினார்...

    இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி ரயிலில் சென்றபோது எனது கைப்பையை வேலு பறித்துச் சென்றுவிட்டார். 'உன்னையே காதலிப்பேன்' படப்பிடிப்பு முடிந்த பிறகு வேலுவின் சகோதரி சாமிலியிடம் பேசினேன். வீட்டுக்கு வந்தால் அதை திருப்பித் தருவதாக அவர் கூறியதை அடுத்து, கடந்த அக்டோபர் 8-ந் தேதி வேலுவின் வீட்டுக்குச் சென்றேன்.

    அப்போது அங்கிருந்த வேலு, என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து கட்டையால் தாக்கினார். கத்தி முனையில் மிரட்டி சில கடிதங்களில் என்னுடைய கையெழுத்து, கை நாட்டுகளை வாங்கினார். அவருக்கு, நான் காதல் கடிதம் எழுதுவதுபோல் மிரட்டி நடிக்க வைத்து அதை வீடியோ படம் பிடித்தார்.

    'என்னவெல்லாமோ' செய்தார்!

    பின்னர் படுக்கையில் என்னை தள்ளினார். எதையும் செய்துவிடாதபடி அழுதேன். அவருக்கு முத்தம் தரும்படி கத்திமுனையில் மிரட்டினார். அதையெல்லாம் வீடியோவில் படம் எடுத்தார். பின்னர் என்னை 'என்னவெல்லாமோ' செய்தார். இந்த நேரத்தில் எனது தாயார் வந்ததால், வேலுவிடம் இருந்து தப்பினேன். இவை அனைத்தையும் அவர் படங்களாகவும் வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.

    எனக்கு தொடர்ந்து செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும், போன் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்ததால் கொச்சி போலீசிலும், தமிழக டி.ஜி.பி.யிடமும் புகார் செய்தேன். டி.ஜி.பி.யிடம் 26.10.10 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில், வேப்பேரி போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். ஆனால் வேலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

    இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்...

    இந்த நிலையில், எனது படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுவிடுவதாக வேலு மிரட்டுகிறார். எனது உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறேன். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும். வேலு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்..." என்று கூறியுள்ளார்.

    வேலுவும் வழக்குப் பதிவு செய்தார்...

    இந்த நிலையில் வேலு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் லிங்கேஸ்வரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

    பாக்கியாஞ்சலி, என்னிடம் ரூ.40 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். அதை திருப்பிக் கேட்டபோது அவரது தாயார் உஷா மற்றும் நண்பர்கள் என்னிடம் வந்து, அந்தத் தொகையை பின்னர் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் 2 வாரத்தில் என்மீது போலீசில் புகார் செய்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளேன். அதன் பிறகு செல்போன் மற்றும் சாட்டிலைட் போன் மூலம் எனக்கு பாக்கியாஞ்சலி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றி பாக்கியாஞ்சலி மீது வேப்பேரி போலீசில் நான் புகார் கொடுத்தேன். ஆனால் எனது புகாரின் அடிப்படையில், அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே பாக்கியாஞ்சலி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்..." என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த 2 மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்று நீதிபதி அக்பர் அலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலு வக்கீல் லங்கேஸ்வரன் ஆஜராகி, பாக்கியாஞ்சலி தொடர்பாக வேலுவும் மனுதாக்கல் செய்துள்ளார். அதையும் பாக்கியாஞ்சலி மனுவுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பாக்கியாஞ்சலி வக்கீல் ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி அக்பர்அலி, அரசு வக்கீலிடம் பாக்கியாஞ்சலி தொடர்பாக போலீசுக்கு ஏதேனும் தகவல் வந்துள்ளதா? என்று கேட்டார். அதற்கு அவர் அப்படி வரவில்லை என்றார்.

    இதையடுத்து நீதிபதி அக்பர்அலி, பாக்கியாஞ்சலி- வேலு இருவர் மனுவையும் நாளை ஒன்றாக விசாரிப்பதாகக் கூறினார்.

    English summary
    Actress Bagyanjali filed a new case on villain Velu. According to the petition, she requested the Court to order the police to take action against Velu for blackmailing her with her abusive photos. Meanwhile, Velu also filed a new case on Bagyanjali for not paying her debt to him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X