'தூண்டில்' போடும் பிபாஷா!

பெரும் இடைவெளிக்குப் பிறகு அதியமான் கொடுத்துள்ள படம் தூண்டில். ஷாம், சந்தியா, குத்து ரம்யா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் போட்ட முதலுக்குப் பழுதில்லை என்ற ரேஞ்சில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது திவ்யாவாக அறியப்படும் குத்து ரம்யாவின் கவர்ச்சி ரசிகர்களை லயிக்க வைத்திருப்பதால் படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தூண்டிலை இந்திக்குக் கொண்டு போகிறாராம் அதியமான். ஏற்கனவே தனது தொட்டாச்சிணுங்கி படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் அதியமான். ஹம் துமாரே ஹெய்ன் சனம் என்ற பெயரில் உருவான அப்படத்தில் சல்மான் கான், ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்போது மறுபடியும் இந்திக்குப் போகிறார் அதியமான். அவரது இந்தி தூண்டிலில், ஷாம் வேடத்தில் நடிக்கவிருப்பவர் விவேக் ஓபராய். ரம்யா வேடத்தில் நடிக்கவிருப்பவர் பிபாஷா பாசு.
சமீப காலமாக முன்னணி நாயகிகள் யாரும் விவேக் ஓபராயுடன் ஜோடி சேர தயங்கி வரும் நிலையில் துணிந்து ரெடி என்று கூறியுள்ளாராம் பிபாஷா. இதனால் ரொம்பவே சந்தோஷமாகியுள்ளாராம் விவேக்.
சந்தியா கேரக்டருக்கு இப்போது ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் அதியமான்.


Click it and Unblock the Notifications











