நயன் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள முதல் பிரமாண்டப் படம் சத்யம். அவரது சொந்தத் தயாரிப்பு இது. இதில் நயனதாரா ஜோடியாக நடித்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ளது. 14ம் தேதி திரைக்கு வருகிறது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் தமிழில் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனராம். தெலுங்கில் பக்கா ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
படம் முழுக்க நயனதாராவின் கவர்ச்சியும், வன்முறையும் தாண்டமாடுவதால் யு சர்டிபிகேட் தர முடியாது என தணிக்கை குழு கூறி விட்டதாம்.
இதில் முக்கியமான விஷயம், செல்லமே என்று வரும் பாடல் காட்சியில் நயனதாரா படு ஆபாசமாக நெளிவு, சுளிவுடன் ஆடியிருப்பதாக ஆட்சேபித்த தணிக்கைக் குழு, அப்பாடலில் பல அசைவுகளை கட் செய்யச் சொல்லி விட்டதாம். இதனால் மிச்ச சொச்ச அசைவுகளுடன் அந்தப் பாடல் குத்துயிரும், குலையிருமாக மாறியுள்ளது.
இந்தப் பாடல் காட்சிக்காகவே நயனதாராவும், விஷாலும் தங்களது உடல் பொலிவைக் கூட்டியிருந்தனர். நயனதாரா டயட் இருந்து, கடுமையாக உடற்பயிற்சி செய்து படு செக்ஸியாக மாறியிருந்தார். ஆனால் அவரது உடல் முறுக்கையும், காதல் நெருக்கத்தையும் பார்த்த தணிக்கைக் குழுவினர் மிரண்டு போய் விட்டனராம்.
இதனால் பாடல் காட்சியில் பல இடங்களை கட் செய்யச் சொல்லி விட்டதால் பாடலின் ஜீவன் பாதி போய் விட்டதாம்.
'சப்'புன்னு போய் விட்டதே!


Click it and Unblock the Notifications











