'போல்டு' தீபிகா!

இந்த கேரக்டர் குறித்து யாரேனும் கேட்டால் படு உற்சாகமாக விளக்க ஆரம்பித்து விடுகிறார் தீபி. கார்த்திக் காலிங் கார்த்திக் படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் ஆகும். அதில் நான் மிகவும் துணிச்சலான, தைரியசாலியான, தன்னம்பிக்கை நிறைய உடைய பெண்ணாக வருகிறேன். இது எனக்கு உற்சாகமான கேரக்டராக உள்ளது என்கிறார்.
சரி படத்தின் கதை என்ன தெரியுமா... படத்தின் ஹீரோவுக்கு அவரிடமிருந்தே அடிக்கடி போன் கால்கள் வருகிறதாம். வித்தியாசமாக இருக்கிறதா, படத்தைப் பார்த்தால் இன்னும் வினோதமாக இருக்கும் போலத் தோன்றுகிறது.
தீபிகா கடைசியாக நடித்த படம் லவ் ஆஜ் கல். அப்படத்திற்கு செமத்தியான வரவேற்பும், வசூலும் கிடைத்ததாம். இதனால் தீபிகா படு உற்சாகமாக தனது புதிய படத்தில் நடிக்கக் காத்திருக்கிறார்.
Comments
கார்த்திக் காலிங் தன்னம்பிக்கை பாத்திரம் தீபிகா பர்ஹான் bold character deepika farhan karthik calling karthik


Click it and Unblock the Notifications