கனவு ரோலுக்காக காத்திருக்கும் தியா

பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவரான தியா மிர்ஸா நடித்துள்ள கிரேஸி 4 பெரும் எதிர்பார்ப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரேஸி 4 படத்தில் ரித்திக் ரோஷன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். படத்தில் தியாவுக்கும் சூப்பர் ரோல்.
கிரேஸி 4 படத்தில் தியா இருப்பது பற்றி முதலில் படு ரகசியமாக வைத்திருந்தாராம் ராகேஷ் ரோஷன். இதுகுறித்து தியா கூறுகையில், நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்தார் ராகேஷ் ரோஷன். படம் பார்க்க வருபவர்கள் திடீரென என்னைப் பார்த்து ஆச்சரியமடைய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இப்படத்தில் நான் ஒரு பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறேன். ஜூஹி சாவ்லா மனநல மருத்துவராக வருகிறார்.
படம் காமெடி என்றாலும் நான் செய்திருப்பது சீரியஸ் ரோல் என்கிறார் தியா கண்களில் மின்னல் மின்ன.
தியா நடிக்க வந்து 7 வருடங்களாகி விட்டதாம். 30 படங்களை முடித்து விட்டாராம். ஆனால் இன்னும் கூட தனது கனவு ரோல் படம் வரவில்லை என்று ஏக்கப்படுகிறார்.
தியா அடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர் மன்மோகன் மஹோபத்ராவின் பிட்ஸ் அன்ட் பீஸஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தனக்கு நல்ல ரோல் என்கிறார்.
அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷூபைட் என்ற படத்திலும் நடிக்கப் போகிறாராம் தியா.


Click it and Unblock the Notifications











