கோபிகா கல்யாண பர்சேஸ்!

கோபிகாவுக்கு விரைவில் கல்யாணம் நடக்கப் போகிறது. மாப்பிள்ளை அயர்லாந்தில் இருக்கிறார். கல்யாணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருக்கிறாராம் கோபிகா.
குறிப்பாக டிரஸ்கள், நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறாராம். நிச்சயதார்த்தத்திற்கு என்ன டிரஸ் போடுவது, என்ன நகை போடுவது, கல்யாணத்தன்று என்ன மாதிரியான காஸ்ட்யூம், நகை என்று பட்டியல் போட்டு பக்காவாக ரெடி செய்து கொண்டிருக்கிறாராம்.
இதுதவிர குடித்தனம் நடத்த அயர்லாந்து போன பின்னர் போடுவதற்காகவே மாடர்ன் டிரஸ்கள் பலவற்றையும் எடுத்துக் குவித்திருக்கிறாராம். அவரே கடை கடையாக ஏறி இறங்கி எல்லாவற்றையும் தேர்வு செய்து வாங்கிக்கொண்டிருக்கிறாராம்.
கோபிகாவின் பர்சேஸ் கொச்சியில் உள்ள கடைகளில்தான் நடந்துள்ளது. வாழ்வளித்த சென்னையில் உள்ள பிரபல கடைகளில் ஒரு கர்ச்சீப் கூட அவர் வாங்கவில்லையாம்.
Comments


Click it and Unblock the Notifications