ஜெயம் ரவி... ஹன்ஸிகா.. இச்!

ஹன்ஸிகா தமிழில் ஒப்பந்தமாகும் இரண்டாவது படம் இது. ஏற்கெனவே தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து வருகிறார்.
"பிரபுதேவாவின் மிகப்பெரிய ரசிகை நான். எனக்கு இப்படியொரு வாய்ப்பு அவரிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அருமையான கதை 'இச்'. அதில் 17 வயது பெண்ணாக நடிக்கிறேன் நான். ஜெயம் ரவி போன்ற ஹேண்'ட்ஸம்மான ஹீரோவுடன் நடிப்பதில் இரட்டிப்பு சந்தோஷம்" என்கிறார் ஹன்ஸிகா.
இச் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் பிரான்ஸில் நடக்கிறது. படத்தின் முக்கால்வாசி இங்குதான் படமாகிறதாம். சில காட்சிகள் மட்டும் சென்னையில் நடக்குமாம்.
படத்தின் பாடல் கம்போஸிங்குக்காக பிரபுதேவாவும் ஹாரிஸ் ஜெயராஜும் ஆஸ்திரேலியா போயிருந்தார்கள். இளமை ததும்பும் ட்டூன்களோடு சென்னை திரும்பினார்களாம்.
ஏஜிஎஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் படமிது. இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளர் இவர்தான். கைவசம் வரிசையாக 5 படங்கள் தயாரிப்பில். பாலா, பிரபுதேவா, மிஷ்கின் என 'கிளாஸ மற்றும் மாஸ்' இயக்குநர்களை வைத்து கலந்து கட்டி தயாரித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











