ரூ.2 லட்சம் ஷூ: ஆசின் அதிர்ச்சி!!

விபுல் ஷா இயக்கும் இந்திப் படம் 'லண்டன் ட்ரீம்ஸ்'. இதில் சல்மான் கான் ஜோடியாக அசின் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பாரிஸில் நடக்கிறது. படப்பிடிப்பின் போது, தனக்கு கொடுக்கப்பட்ட ஷூ சரியில்லை என்றும் வேறு ஷூ தருமாறும் கேட்டாராம் ஆசின். இதையடுத்து அங்குள்ள ஷோ ரூம் ஒன்றுக்கு ஆசினை அழைத்துச் சென்ற விபுல் ஷா, ரூ.2 லட்சத்துக்கு ஷூ வாங்கிகே கொடுத்தார் என செய்தி வெளியானது. இத்தகவலை விபுல் ஷா உறுதிப் படுத்தினார். ஆனால், அசின் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அசின் கூறியுள்ளதாவது:
இந்தச் செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி மேற்கொண்டு பேசவே விரும்பவில்லை. படத்தின் டிசைனரிடமே கேளுங்கள். அவர், இது உண்மை என்று சொன்னால் நானும் ஒப்புக்கொள்கிறேன்.
இதோ போலத்தான் கஜினி படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் ஜியா கானை நான் இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதாகக் கூறுவதும். தேவையில்லாமல் இதுபோன்ற புரளிகளை கிளப்பி விடுகிறார்கள்... என்கிறார் ஆசின்.


Click it and Unblock the Notifications











