ஷ்ரியாவுக்கு கமலின் 'பரிசு'!

இதனை ஷ்ரியாவே இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
பாங்காக்கில் நடந்த ஜக்குபாய் படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பியுள்ள ஷ்ரியாவுக்கு நேற்று நள்ளிரவில் வாழ்த்துச் சொல்லி ஒரு போன் வந்ததாம். மறுமுனையில் பேசியவர் கலைஞானி கமல்.
தனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொன்னவர், இந்தப் பிறந்த நாளுக்குப் பரிசாக தன் படத்தின் கதாநாயகி வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும், அது என்றும் மறக்க முடியாத நினைவுப் பரிசாக இருக்கும் என்றும் தெரிவித்தாரம்.
பிறந்த நாளையொட்டி சக நடிகர்-நடிகைகளுக்கு இன்று இரவு பிரமாண்ட விருந்தளிக்கிறார் ஷ்ரியா. இதில் அவரது நெருங்கிய தோழிகளான த்ரிஷா மற்றும் ரீமா சென் கலந்து கொண்டு விடிய விடிய உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications