கார்த்திகாவும் கவர்ச்சிக்கு ரெடி!

'365 காதல் கடிதங்கள்', 'அலையோடு விளையாடு', 'வைதேகி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்திகா. ஆனாலும் இவை இன்னும் வெளியாகவில்லை.
இந்தப் படங்களிலும் வழக்கம்போல அதே பாவாடை தாவணி காஸ்ட்யூமில்தான் வருகிறாராம்.
இதனால் இந்த தாவணி, பாவாடை இமேஜிலிருந்து ஜம்ப் ஆக முடிவு செய்து விட்டாராம் கார்த்திகா.
ஏன் இப்படி என்று கேட்டால், பின்னே என்னங்க, எப்பப் பார்த்தாலும் இந்தப் பொண்ணு தாவணிலதான் வருதுன்னு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாங்க ரசிகர்கள். இதை மாற்றணும்னு நானும் முயற்சி பண்றேன். ஆனா சரியான படம்தான் அமையவில்லை, என்கிறார் கார்த்திகா.
அப்போ கவர்ச்சிக்கு ரெடியா...?
அட என்னங்க நீங்க... இதுக்குமேல எப்படி வெளிப்படையா சொல்றது இதையெல்லாம். அந்த மாதிரி வேடங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்.. என்கிறார்.
கோலிவுட் படைப்பாளிகள் கவனத்துக்கு!
Comments


Click it and Unblock the Notifications