காத்ரீனா-ஒரு ஆட்டத்துக்கு1.5 கோடி!

By Staff

Katrina Kaif
காத்ரீனா கைப், காஸ்ட்லி 'ஐட்டம்' ஆக மாறியுள்ளார். ஒரு இந்திப் படத்தில், ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட ரூ. ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் காத்ரீனா.

இந்தியத் திரையுலகிலேயே காஸ்ட்லியான சினிமா பீல்ட் பாலிவுட்தான். சாதாரண நடிகர்களுக்கும் கூட அங்கு அள்ளித் தருவார்கள். இந்த நிலையில் சமீபத்தில் புதிய சாதனை ஒன்று அங்கு படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடுவதற்காக காத்ரீனா கைபுக்கு ரூ. ஒன்றரை கோடி கொடுத்து அசத்தியுள்ளனர். ஸ்ரீஅஷ்டவிநாயக் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ப்ளூ படத்தில்தான் இந்த காஸ்ட்லி ஐட்டம் பாட்டு இடம் பெறுகிறது.

பாலிவுட்டில் ஒரு பாட்டுக்கு ஆடிய நடிகைகளுக்கு இதுவரை இவ்வளவு பெரிய தொகை தரப்பட்டதில்லையாம். எனவே காத்ரீனா கைப் ஒரே படத்தில் காஸ்ட்லினி நடிகையாக மாறியுள்ளார்.

ப்ளூ படத்தில் சஞ்சய் தத், அக்சய் குமார், லாரா தத்தா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இந்த ஐட்டம் பாட்டுக்கு ஆடியது மறக்க முடியாத, சுகானுபவம் என்கிறார் சல்மானின் அன்புத் தோழியான காத்ரீனா.

பணத்திற்காக நான் இந்தப் பாடலை ஒத்துக் கொள்ளவில்லை. அக்சய்தான் இந்தப் பாட்டுக்கு கண்டிப்பாக நீ ஆட வேண்டும் என்று அன்புடன் வற்புறுத்தினார். இதையடுத்தே நான் ஏற்றுக் கொண்டேன் (சல்மான் பாய் உஷார்).

உண்மையிலேயே இது அழகான பாடல். குத்துப் பாட்டு என்று பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது என்கிறார் காத்ரீனா.

அடுத்து யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள் என்று காத்ரீனாவிடம் கேட்டால், பலருடனும் இணைந்து விட்டேன். ரித்திக் ரோஷனுடன் இணைய ஆர்வமாக உள்ளேன். மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர். அவருக்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X