பத்மப்ரியாவுக்குப் பதில் கீரத்

By Staff

Keerath
அர்ஜூன் நடிக்கும் துரை படத்தின் நாயகியாக முதலில் பேசப்பட்ட பத்மப்ரியாவுக்குப் பதில் தற்போது கீரத் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

வெங்கடேஷ் இயக்கும் புதிய படம் துரை. அர்ஜூன் நாயகன். தேனப்பன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

இதில் முதலில் பத்மப்ரியா நாயகியாக புக் செய்யப்பட்டிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், அர்ஜூன் அதிரடி நாயகன். ஆனால் அவருக்கு சற்றும் பொருத்தமில்லாத பத்மப்ரியா எப்படி ஜோடியாக நடிப்பார் என்று பலருக்கும் குழப்பம்.

அதே குழப்பம் அர்ஜூனுக்கும் வந்துள்ளது. பத்மப்ரியா பொருத்தமாக இருக்க மாட்டாரே என்று அர்ஜூன் கூறியுள்ளார். இந்த நிலையில் படத்தில் பத்மப்ரியாவுக்கு கிளாமரான ரோல் என்று அவரிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் அணிய வேண்டிய உடைகளும் படு கிளாமராக டிசைன் செய்யப்பட்டன.

இதை பத்மப்ரியா ஏற்கவில்லை. மேலும், தனக்கென தனியாக பேஷன் டிசைனரை வைத்துக் கொள்ள விரும்பியுள்ளார் பத்மப்ரியா. இதனால் கடுப்பான தயாரிப்பு தரப்பு அதெல்லாம் முடியாது என்று கூறி விட்டது.

மேலும் இதுதொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில், நடிகர் சங்கம் ஆகியவற்றில் முன் கூட்டியே, முன்னெச்சரிக்கையாக புகாரும் செய்து விட்னர். எல்லாம் மிருகம் படத்தில் பத்மப்ரியாவால் இயக்குநர் சாமிக்கு ஏற்பட்ட அனுபவம் கொடுத்த பாடம்தான் காரணம்.

இந்த நிலையில் பத்மப்பிரியாவைத் தூக்கி விட்டு இப்போது கீரத்தை புக் செய்துள்ளனர். இவர் வட்டாரம் படத்தின் நாயகி. அதன் பின்னர் காணாமல் போனவர். இப்போது அர்ஜூன் படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார்.

கவர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்றால் கூடுதல் கவர்ச்சி காட்டக் கூடிய திறமை, தைரியம் படைத்தவர் கீரத் என்பதால் அவரைப் புக் செய்துள்ளனராம்.

இந்தப் படம் தவிர ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலும் கீரத் நடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X