இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!

By Staff

Poorna with Thilak
தமிழ் சினிமாவில் வர வர ரொமான்ஸ் காட்சிகளை உருவாக்க ரூம் போட்டு உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர் போல. படத்துக்குப் படம் நாவல்டியாக ஏதாவது காட்சிகளை வைத்து அசத்தி வருகின்றனர்.

முன்பு விஜயகாந்த் கையில் பம்பரத்தைக் கொடுத்து சுகன்யா தொப்புளில் விட்டு அசத்தினர். அந்தக் காலகட்டத்தில் அது படு புதுமையான காட்சியாக பேசப்பட்டது.

இப்போது 'வாயுடன்' விளையாடி வருகிறது கோலிவுட். அதாவது முத்தக் காட்சிகளில் பல்வேறு விதமான புதுமைகளைப் படைத்துத் தள்ளிக் கொண்டுள்ளனர்.

இத்தனை விநாடிகள் இவர் முத்தம் கொடுத்தார். இப்படி முத்தம் கொடுத்தார் என விதம் விதமான நியூஸ்கள் வெளியாகி கோலிவுட்டை முத்த யுத்த களமாக மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் படத்தில் இடம் பெற்றுள்ள இரு காட்சிகள் பரபரப்பாக பேசப்படுகின்றன. ஒன்று முத்தக் காட்சி, இன்னொன்றிலும் வாய் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் இது முத்தம் பிளஸ் சாப்பாட்டு காட்சி.

முதலில் முத்தம். நாயகி பூர்ணாவுக்கு, ஹீரோ திலக் கொடுத்துள்ள இச் காட்சி படு கிளுகிளுப்பாக வந்துள்ளதாம். மேட்டர் என்னவென்றால், திலக் முத்தமிட ரொம்பவே தயங்கினாராம். பொறுத்துப் பார்த்த இயக்குநர், பூர்ணாவிடம், நீங்களே பேசாமல் முத்தமிட்டு விடுங்கள் என்று கூற அவரும் நோ ப்ராப்ளம் என்றிருக்கிறார்.

இதையடுத்து ஆக்ஷன் சொன்னதும், பூர்ணாவே, திலக்கை இழுத்துப் பிடித்து அழுத்தமான ஒரு முத்தத்தை உதட்டில் வைத்து ஓ.கே. செய்தாராம் சீனை.

அடுத்த சீனும் கிளுகிளுப்பானதுதான். அதாவது ஒரு சப்பாத்தியை எடுத்துக் கொண்டு பூர்ணாவும், திலக்கும் வாய்களில் வைத்துக் கடித்து சாப்பிடுகிறார்களாம். அதாவது சப்பாத்தி சாப்பிடும் சாக்கில் முத்தமிட்டுக் கொள்ளும் வகையில் இந்தக் காட்சியாம்.

சாப்பாட்டுக்கு சாப்பாடு, ரொமான்ஸுக்கு, ரொமான்ஸ். எப்படி இயக்குநரின் ஐடியா?

பூர்ணா, தமிழ் சினிமாவின் அடுத்த ஆசின் என கொடைக்கானல் ஆடியோ வெளியீட்டின்போது விஜய் பாராட்டிப் பேசியது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X