கிளிசரின் இல்லாத மதுமிதா அழுகை!

By Staff

Madhumitha
குடைக்குள் மழை மாதிரியே முடங்கிப் போன தனது திரை வாழ்க்கை, யோகி படம் மூலம் சரியாகும் என நம்புகிறார் மதுமிதா.

பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுமிதா, இங்கிலீஷ்காரன் உள்பட ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்தார்.

ஆனால் தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் வகையில் எந்தப் படமும் அமையவில்லை.

இந்நிலையில் அமீருக்கு ஜோடியாக யோகியில் நடிக்கும் வாய்ப்பு வர, இழந்ததைப் பெற்ற திருப்தி அவருக்கு.

இந்த வாய்ப்பு குறித்து என்ன சொல்கிறார் மதுமிதா?

யோகி என் வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமையும் என்ற நம்பிக்கை முதல்நாளே வந்துவிட்டது. ஒவ்வொரு சினிமா ரசிகரும் மறக்கமுடியாத பாத்திரமாக அமைந்துள்ளது யோகியில் என் கேரக்டர்.

ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் அந்தப்படத்தில்.

ஒரு காட்சியில் வசனத்துக்கு இடையில் அழ வேண்டும். கட் செய்துவிட்டு கிளிசரினும் போட முடியாது. அந்த காட்சியை என் மனதில் அமீரும், இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் அழுத்தமாகப் பதிய வைத்துவிட்டனர். காட்சி படமாகும்போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.

இதில் எனது 100 சதவீத நடிப்பு வெளிப்படும். தேசிய விருது கூட கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் பெரிதும் நம்பும் இன்னொரு படம் 'சொல்ல சொல்ல இனிக்கும்'. இந்தப் படத்தில் நவ்தீப் ஜோடியாக நடிக்கிறேன், எனும் மதுமிதா, நடித்துக் கொண்டே படிப்பையும் தொடர்கிறார்.

"இப்போது எம்.பி.ஏ. படிக்கிறேன். தேர்வு நடப்பதால் இயக்குனர் அனுமதியுடன் ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டுப் படித்து வருகிறேன். ஷிவ பாலாஜியுடன் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. படிப்பு முடிந்தவுடன் திருமணம். நல்ல வேடங்களாக வந்தால் திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்," என்கிறார் மதுமிதா.

நல்ல தெளிவு!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X