பாஜக எம்.எல்.ஏவை மணந்தாரா காத்ரீனா - திருமணச் சான்றிதழால் சர்ச்சை

காத்ரீனா கைப் நீண்ட காலமாக சல்மான் கானைக் காதலித்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு செய்தி உள்ளது. இடையில் அவரை வேறு சிலருடனும் இணைத்து செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் புதிதாக திருமண வதந்தி ஒன்றில் காத்ரீனா சிக்கியுள்ளார். கத்ரீனாவும், இந்தூரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ரமேஷ் மென்டோலாவும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இந்தக் கல்யாணம் நடந்ததாகவும், அது இந்தூர் மாநகராட்சி திருமணப் பதிவேட்டில் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
ஆனால் இதை இந்தூர் மாநகராட்சி திருமணப் பதிவாளர் டாக்டர் நட்வர் சர்தா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த திருமண சான்றிதழ் போலியானது. அந்த சான்றிதழை மாநகராட்சி வழங்கவில்லை.
உண்மையான ஒரு திருமண சான்றிதழில் இருந்து கம்ப்யூட்டர் உதவியுடன் நடிகை கத்ரீனா கைப்க்கும், ரமேஷ் மென்டோலாவுக்கும் திருமணம் ஆனது போல ஒரு போலியான சான்றிதழை தயாரித்து உள்ளனர். இந்த விஷமத்தனமான செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதுபற்றி விரைவில் போலீசில் புகார் செய்யப்படும். இந்த குற்றத்தை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கேத்ரீனாவும் மறுப்பு..
அதே போல கேத்ரீனாவும் அதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு யாருடனும் இன்னும் திருமணமாகவில்லை. என் கணவர் என்று சொல்லப்படும் அந்த நபர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.
அதைத் தயாரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 2ம் தேதி என்னைத் திருமணம் செய்ததாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று நான் நியூயார்க்கில் சூட்டிங்கில் இருந்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications











