'சுகர் கேன்டி'... முமைத் கான் ஆரம்பிக்கும் பட நிறுவனம்!

இப்போதும் நிறைய தெலுங்குப் படங்களில் அதிரடி - குத்தாட்ட நாயகியாக நடித்து வருகிறார்.
கூடவே, நடிப்புக்கு அப்பால் தனது கேரியரை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ள முமைத், திரைப்பட விழாக்கள், பெரிய நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை அந்த நிறுவனம் மூலம் நடத்துகிறார்.
அடுத்து திரைப்பட தயாரிப்பிலும் குதிக்கிறாராம் முமைத். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ், தெலுங்கில் நிறைய நடித்துவிட்டேன். பாலிவுட்டில் நுழைய விரும்பினேன். அதுவும் நடந்துவிட்டது. சுனில் ஷெட்டியுடன் ஒரு படம் செய்துள்ளேன்.
அடுத்து படத் தயாரிப்புதான். நல்ல படங்களைத் தயாரிக்க விரும்புகிறேன். இதற்காக சுகர் கேண்டி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளேன்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications