'தம்' வில்லி மும்தாஜ்!

லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் ராஜாதி ராஜா படத்தில்தான் வில்லியாக திறமை காட்டப் போகிறார் மும்ஸ். அதுவும் ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் பாத்திரமாம்!
வில்லத்தனத்தை சாதாரணமாகக் காட்டினால் சரிவருமா... அதனால் வாயில் எந்நேரமும் புகையும் சிகரெட்டோடு வேறு வருகிறாராம்.
அவர் கூறுகையி்ல்,
இந்தப் படத்தில் முழுக்க முழுக்க வில்லாயாகவே, அதிலும் ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் கேரக்டரில் நடிக்கிறேன். இந்தக் கேரக்டரை ரொம்ப தத்ரூபமாகக் காட்ட சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை எடுத்துள்ளனர். விளம்பரத்துக்காக இவை பயன்படுத்தப்படும். ஆனால் படத்தில் அந்த மாதிரி காட்சிகள் வராது என நினைக்கிறேன்.
அடுத்து மைலா, அரசி படங்களில் நடிக்கிறேன். அரசியில் என்கவுன்ட்டர் போலீஸ் வேடம்!
மலபார் போலீஸ், வீராசாமி, பட்ஜெட் பத்மநாபன் போன்ற படங்களில் குடும்பப் பாங்காகவே நடித்தேன். ஆனால் கட்டிப்புடி கட்டிப்புடிடா... போன்ற கவர்ச்சி ஆட்டத்தை மட்டுமே ரசிகர்கள் ஞாபகம் வைத்துள்ளனர். அதற்கு நான் என்ன செய்வது?
சரி, அதை விடுங்க... உங்க 'தம்' மேட்டர் அன்புமணி ராமதாசுக்குத் தெரியுமா...!


Click it and Unblock the Notifications











