நக்மாவின் கல்யாண ஆசை

ரஜினியின் ஜோடியாக நடித்ததால் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நக்மா. ஒரு காலத்தில் இவருடன் ஜோடியாக நடிக்க நடிகர்களிடையே தள்ளுமுள்ளே ஏற்பட்டதுண்டு. நக்மாவும் கிளாமரை அள்ளி வீசி ரசிகர்களையும், ஹீரோக்களையும் கலக்கிய காலம் அது.
முன்னணி நடிகர்கள் முதல் பிரபுதேவா உள்ளிட்ட புதிய நடிகர்கள் வரை நக்மா ஜோடி போட்டு நடித்து வந்தார்.
இடையில் சரத்குமார், பிரபு தேவா என ஹீரோக்களுடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். சரத்குமார் மேட்டருக்குப் பின்னர் நக்மா தமிழ்த் திரையுலகிலிருந்து தடாலடியாக ஜகா வாங்கினார். அதன் பின்னர் கங்குலியுடன் பலமாக பேசப்பட்டார். திடீரென தாவூத் இப்ராகிமுடன் நக்மாவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இப்போது நக்மா மும்பையிலியே நிரந்தரமாக தங்கி விட்டார். போஜ்பூரி படங்களில் நக்மாதான் சூப்பர் ஸ்டார். இன்னும் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நக்மாவுக்கு கல்யாண ஆசை வந்துள்ளதாம்.
அதுகுறித்து அவர் கூறுகையில், நானும் ஒரு பெண்தான். எல்லாப் பெண்களுக்கும் எந்தெந்த வயதில் என்னென்ன ஆசைகள் வருமோ அவை எனக்கும் வந்துள்ளன.
இப்போது திருமணத்திற்கு எனது வயது பொருத்தமாக இருக்கிறது. எனவே திருமணத்திற்கு நானும் தயாராகியிருக்கிறேன். எனக்கேற்ற நல்ல ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
எனது தங்கைக்கு நல்ல கணவர், குழந்தை, மாமனார் வீடு கிடைத்துள்ளது. அதேபோல வாழ நானும் ஆசைப்படுகிறேன். என்னை உண்மையாக, நேர்மையாக நேசிக்கும் ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்கிறார் நக்மா.
அப்ளிகேஷன் போட விரும்புவோர் போட்டுப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











