அழகிய சொகுசு பங்களாக்கள் உருவாக்கித் தரும் நடிகை நமீதா!

By Shankar

Namitha
தமிழ் சினிமாவின் பிராமாண்ட நடிகையான நமீதா, இப்போது ஒரு பிரமாண்ட பிஸினஸிலும் குதித்துள்ளார். கோடிக்கணக்கான மதிப்பில் பெரிய சொகுசு வீடுகளை உருவாக்கித் தரும் ரியல் எஸ்டேட் பிஸினஸ்தான் அது!

பூமியி்ல் ஒரு சொர்க்கம் என்று வர்ணிக்கும் அளவுக்கு, பார்ப்போர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் 'ஆம்பி வேலி' நகரில் (மும்பை அருகே உள்ள மலைப் பிரதேசம்) அழகழகான வீடுகளை உருவாக்கித் தரும் நிறுவனத்தை தனது நண்பரும் பங்குதாரருமான பரத் கபூருடன் இணைந்து ஆரம்பித்துள்ளார் நமீதா.

மிகச் சிறந்த வீடுகளை, பல்வேறு அழகிய டிசைன்களில் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கி வருகிறார்கள். நமீதாவின் இந்த நிறுவனம் மூலம் ஏற்கெனவே சில திரையுலகப் பிரபலங்கள் ஆம்பி வேலியில் வீடுகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனத்தின் பெயரில் விற்கப்படும் இந்த வீடுகளின் விலை ரூ 3 கோடியிலிருந்து 18 கோடி வரை, பரப்பளவு, டிசைன்களுக்கேற்ப மாறுபடுகிறது. மும்பையைச் சேர்ந்த 'நூரேன் ஜூமானி' என்ற பிரபல இன்டீரியர் டிசைனருடன் இணைந்து புதுப்புது டிசைன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நமீதாவும் அவரது தலைமையில் இயங்கும் குழுவினரும்.

கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்றுதான் இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார் நமீதா.

சென்னையிலும் இதுபோன்ற அழகிய வீடுகளை உருவாக்கித் தரும் திட்டத்தையும் கையோடு துவங்கியுள்ளார் நமீதா.

யார் கண்டது... நமீதாவின் கைவண்ணத்தில் உருவான சொகுசு பங்களாவின் 'முதலாளி' நீங்களாகவும் இருக்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X