நானா தோல்விப்பட நாயகி? - பொங்கும் நயன்தாரா

By Staff

Nayantara
பொய்யைச் சொன்னாலும் ஃபோர்ஸா சொல்லணும்யா... அப்பதான் சினிமாவுல நிலைக்க முடியும்!' என்பார் வடிவேலு அடிக்கடி.

நயன்தாராவின் நேற்றைய ஸ்டேட்மெண்டைப் பார்த்தபோது, வடிவேலுவின் இந்த பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் தோல்விப் படங்களில் நடித்த ஒரே நாயகி நயன்தாராவாகத்தான் இருக்கும். சத்யம், குசேலன், வில்லு, ஏகன், ஆதவன்... இப்படி ஊத்தலில் முன்னணியில் நின்ற படங்களில் அம்மணிதான் ஹீரோயின்.

ஆனால் அவரோ தனது எந்தப் படமும் தோல்விப் படமே இல்லை என்று சாதிக்கிறார் ஒரேயடியாக.

அவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட் இது:

நான் தோல்விப் படங்களில் நடித்தேன் என்று கூறுவதே தவறு. நான் நடித்த எல்லாப்படங்களும் நன்றாக ஓடியவையே. என்னால் எந்தப் படம் ஓடாமல் போனது? அப்படியே தோற்றாலும் அதில் என் பங்கு என்ன?.

இதெல்லாம் என் கேரியரை ஒன்றுமே செய்யாது. நான் இன்றும் முதல்நிலை நாயகிதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என கையில் படங்கள் இருந்து கொண்டேதான் உள்ளன.." என்கிறார்.

ரொம்ப 'ஃபோர்சா'த்தேன் சொல்றாய்ங்க ஊரறிஞ்ச பொய்யை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X