கவர்ச்சி பாம் சோனா தயாரிப்பாளராகிறார்.

By Staff

Gladia
மிகக் குறுகிய காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாகவும் சிறு வேடங்களிலும் 'நடித்து' முடித்துவிட்டவர் சோனா. சமீபத்தில் ரஜினியின் குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகக் கூட நடித்தார்.

மிருகம் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியும், பிரஸ் மீட்களில் காட்டும் கவர்ச்சியும் கோலிவுட்டை கலங்கடித்தவை.

இந் நிலையில் அவர் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு யுனீக் புரொடக்ஷன்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் எடுக்கப் போகும் முதல் படம் 'ஓடு மச்சி ஓடு'.

இதில் கதாநாயகனாக நடித்து படத்தையும் இயக்கப் போகிறவர் ஜெய்லானி. ஏற்கனவே 'கேள்விக்குறி' என்ற படத்தை 12 நாள்களில் இயக்கி நடித்தவர் தான் இவர். படமும் 12 நாள் ஓடியதாகக் கேள்வி. அதில் சோனாவும் ஜெய்லானியும் இணைந்து நடித்தனர்.

ஜெய்லானியுடன் மைக்கேல் என்ற புதுமுகம் இன்னொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் மிஸ்டர் சென்னை பட்டம் வென்றவர்.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த விளம்பர மாடலான கிளாடியா. இவர் ஜெர்மனியில் பல ஆல்பங்களிலும் பாடியுள்ளாராம் (படத்துல ஒரு ஜெர்மன் பாட்டும் உண்டா?).

இவரைத் தவிர மும்பையைச் சேர்ந்த இளம் மாடலான ஸ்வேதா என்பரையும் இன்னொரு ஹீரோயினாகப் போட்டுள்ளனர்.

ஹீரோயின் ஜெர்மனிக்காரர் என்றால் மியூசிக்கை கவனிக்கப் போவது ஹாலிவுட் இசையமைப்பாளர் பெட்ரிக் வைட்மேன்.

விறுவிறுப்பான ஆக்ஷன் கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் எடுக்கிறார்களாம்.

படத்தில் சோனாவும் சில காட்சிகளில் தனது தரிசனத்தைத தருவாரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X