twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2005ல் வெளியான படத்தின் ஆபாசப் போஸ்டரால் சிக்கலில் பூஜா பட்!

    By Sudha
    |

    Pooja Bhatt
    2005ம் ஆண்டு வெளியான ராக் படத்தின் போஸ்டர் தொடர்பான வழக்கில் நடிகை பூஜா பட்டுக்கு இப்போது மீண்டும் சிக்கலாகியுள்ளது.

    நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் பூஜா பட். அவரது தயாரிப்பில் 2005ம் ஆண்டு வெளியான படம் ராக். இப்படத்தில் தென் ஆப்பிரிக்க மாடல் அழகியான எலினா ஹம்மான் நடித்திருந்தார். இப்படத்துக்கான போஸ்டர்களில் எலினாவின் படு கவர்ச்சிகரமான போஸ்கள் இடம் பெற்றிருந்தன. இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து பூஜா பட், அவரது நிறுவனமான பிஷ் ஐ, இணைத் தயாரிப்பாளர் சுஜித் சிங், அவரது நிறுவனமான ஷ்ரேயா கிரியேஷன்ஸ் ஆகியவை மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

    இருப்பினும் பந்த்ரா கோர்ட், 2008ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி இவர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் சமூக சேவகர் வினோத் ஜெயின் அப்பீல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் தற்போது பந்த்ரா கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் பூஜா பட்டுக்கு சிக்கலாகியுள்ளது.

    English summary
    Mumbai sessions court has set aside a magisterial order quashing an FIR against actress-producer Pooja Bhatt. A case was registered against Bhatt for the posters of the film 'Rog', which allegedly carried 'indecent' pictures. The sessions court has quashed the magistrate's order discharging Bhatt, her company Fish Eye, co-producer Sujit Singh and his company, Shreya Creations. The case dates back to January 2005, when Bhatt's film 'Rog' was released. Some people had objected to the posters of the film, which carried 'scantily-clad' pictures of South African model Elina Hamman. The police had then registered a case of obscenity against six persons, including Bhatt and Singh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X