தத்துவ 'பூச்சாண்டி'யும் ரகஸியாவும்!

கண்மணி இயக்கத்தில் சந்தியாவும், சங்கீதாவின் தம்பி பரிமளும் இணைந்து நடிக்கும் படம் ஓடிப் போலாமா. இளம் காதலர்களின் போராட்டக் கதை இது.
இப்படத்தில் ரகஸியாவின் அட்டகாசமான ஐட்டம் பாட்டு உள்ளது. ஆனால் வெறும் கவர்ச்சிப் பாட்டாக இல்லாமல் வித்தியாசமான முறையி்ல இதன் பாடல் வரிகளைப் போட்டுள்ளார்களாம்.
சினேகன் எழுதிய இந்தப் பாடல், பூச்சாண்டி பூச்சாண்டி காதல் ஒரு பூச்சாண்டி என்று தொடங்குகிறது. பரிமளும், சந்தியாவும் ஆடிப் பாடும் இந்தப் பாடலில் மெயின் டான்ஸராக ஆடியுள்ளார் ரகஸியா.
படு வித்தியாசமான காஸ்ட்யூமில் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளார் ரகஸியா. இதுவரை ஆடியுள்ள கவர்ச்சிப் பாடல்களுக்கு மத்தியில் இந்தப் பாடல் வித்தியாசமானது. இதன் வரிகளைப் புரிந்து கொண்டு ஆடியுள்ளேன். மறக்க முடியாத பாடல், சூப்பர் ஹிட் ஆகும் என்கிறார் ரகஸியா.
விஜிபி தங்கக் கடற்கரையில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலை மும்பையைச் சேர்ந்த பாடகி அஞ்சலி பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











