ஸ்ரேயா..1 மணி நேர கால்ஷீட்டுக்கு ரூ.5 லட்சம்!

By Chakra

Shriya
ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம்... ஸ்ரேயாவின் அதிரடி சம்பளம்!!

ஒரு கட்டத்துக்கு மேல் வந்துவிட்டால், நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதைவிட விளம்பரங்களில் நடிப்பதே பாதுகாப்பாகவும் லாபகரமானதாகவும் ஆகிவிடுகிறது.

லக்ஸ் விளம்பர காலத்திலிருந்து பார்த்துவரும் உண்மை இது. ஐஸ்வர்யா ராய் போன்ற சிலருக்குத் தவிர, மற்ற நாயகிகள் மாதக் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடித்தாலும் லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்கிறது.

ஆனால் அதுவே விளம்பரப் படங்கள் என்றால் எளிதில் கோடிகளைப் பார்க்க முடிகிறது. இந்த வசதிதான் இன்று பெரிய நடிகைகள் பலர், 'விளம்பரப் பட வாய்ப்பு வருதா பாருங்க' என்று தங்களின் மேனேஜர்களை விரட்டி வருகிறார்களாம்.

அசின், த்ரிஷா குளிர்பான விளம்பரங்களில் நடிக்கின்றனர். நயன்தாரா போத்தீஸ் விளம்பரத்தில். தமன்னா சோப்பு விளம்பரத்தில் வருகிறார். சினேகா ஜவுளி விளம்பரத்தில் நடிக்கிறார். நமீதா கிஸ்கால் கம்பி விளம்பரத்தில் மற்றும் புதுமுக நடிகைகள் பலர் துணிக்கடை விளம்பரங்களில் வருகிறார்கள்.

தற்போது ஸ்ரேயாவும் விளம்பர படத்தில் நடிக்கிறார். 6 விளம்பர படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பொருட்களை விளம்பரபடுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 லட்சம் என சம்பளம் பேசியுள்ளார்.

ஹைதராபாத்தில் பிரபல ஜவுளிக்கடை யொன்றை திறந்து வைத்தார். ஒரு மணி நேரம் கடையிலேயே செலவிட்டார். அங்கிருந்து புறப்பட்டதும் ரூ. 5 லட்சத்தை கொடுத்தனர். இந்த மாதம் மட்டும் இதே போல ஆறு ஜவுளி கடைகளை இதே சம்பளத்தில் திறக்க சம்மதித்துள்ளார்... ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்களில்லை. கைவசமிருந்த சிக்கு புக்கு விரைவில் வெளியாகவிருக்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X