பாலியல் கொடுமைக்குள்ளாகும் வேலைக்காரியாக ஸ்ரேயா!

By Staff

Shreya
பயர் புகழ் தீபா மேத்தா படத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் அப்பாவி வேலைக்காரப் பெண்ணாக நடிக்கிறாராம் ஸ்ரேயா.

இந்தப் படத்துக்குப் பெயர் 'வாட்ஸ் குக்கிங்'. ஒரு சில பணக்கார வீடுகளில் வேலைப் பார்க்கும் அப்பாவிப் பெண்கள் எந்த மாதிரியெல்லாம் கொடுமைக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

பாலியல் கொடுமைகள், உடல் ரீதியான சித்திரவதைகள் என பலவற்றையும் தாங்கிக் கொண்டு, பணக்காரர்களின் அதிகார பலத்துக்கு அஞ்சி வாழும் ஒரு வேலைக்காரப் பெண் பாத்திரமாம் ஸ்ரேயாவுக்கு.

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் ஜக்குபாய் படத்துக்காக பாங்காக் புறப்படும் முன் ஸ்ரேயா கூறியதாவது:

தீபா மேத்தா இயக்கும் வாட்ஸ் குக்கிங் படம் சர்வதேச அளவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. எனக்கு புதிய நம்பிக்கையைத் தந்துள்ள படம் இது.

ஏற்கெனவே நடித்து வரும் ஹாலிவுட் படம் 90 சதவீதம் முடிந்திருக்கிறது. அடுத்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு படமும், 2 புது படங்களிலும் நடிக்கிறேன்.

தனுஷ் பட விவகாரத்தில் என் பக்கம் யாரும் எந்தத் தவறும் கூறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ஜக்குபாய் படத்துக்காக இப்போது பாங்காக் செல்கிறேன். 30 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும். தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம், என்றார் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X