நட்பு பாராட்டும் தமன்னா

கேடி படம் மூலம் தமிழ் திரையுலகைத் தேடி வந்தவர் தமன்னா. ஆனாலும் அவருக்கு நல்ல பிரேக் கிடைக்கவில்லை. லேட்டஸ்டாக வந்த கல்லூரி படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திரு்நதார். துரதிர்ஷ்டமோ என்னவோ படம் சரியாக போகவில்லை.
ஆனாலும் தமன்னா கையில் நிறையப் படங்கள் உள்ளன சூர்யாவுடன் அயன், தனுஷுடன் படிக்காதவன் என பிசியாகத்தான் உள்ளார். கூடவே, ரவிகிருஷ்ணாவின் நேற்று இன்று நாளை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.
தமன்னாவுக்கு தமிழ்த் திரையுலகில் நிறைய நண்பர்கள் இல்லாவிட்டாலும் கூட அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அத்தனை பேரும் நல்ல நண்பர்களாகியுள்ளனராம்.
ஹீரோக்களுடன் மட்டும் அவர் மனம் விட்டுப் பழகுவதே இதற்குக் காரணமாம். சமீபத்தில் அவருக்கு இப்படிக் கிடைத்த தோஸ்த் விஷால் என்கிறார்கள்.
விஷால் அடுத்து நடிக்கப் போகும் நேரடித் தெலுங்குப் படத்தில் நாயகி தமன்னாதானாம்.
இதைக் கேள்விப்பட்டு மற்ற நாயகிகள் காதில் புகை விட்ட வண்ணம் கடுப்பாக இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











