பொன்னர் சங்கரில் தீபிகா?

கலைஞர் கருணாநிதியின் நூல் பொன்னர் சங்கர். இப்போது இது திரைப்படமாகிறது. தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். பிரஷாந்த் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னி தீபிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம். அவர் இதுவரை சம்மதம் தெரிவித்ததாக தெரியவில்லை. இருப்பினும் முயற்சிகள் தொடருகிறதாம்.
தீபிகா ஒரு வேளை ஒப்புக் கொண்டால் கலைஞரின் படைப்பில் நடிக்கும் முதல் பாலிவுட் நாயகி என்ற பெருமை தீபிகாவுக்குக் கிடைக்கும்.
தமிழில் நடிக்க தீபிகாவுக்கு ஆட்சேபனை இல்லையாம். ஆனால் 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதனால்தான் ஏற்கனவே அவரை அழைத்து வர முயன்றவர்கள் அமைதியாகி விட்டனர்.
இந்த நிலையில்தான் தியாகராஜன் தீபிகாவை அழைத்து வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications