பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த திரிஷா

திரிஷா தனது பிறந்த நாளை வருடா வரும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ரசிகர் மன்றம் வேறு இப்போது இருப்பதால், தனது மன்றத்தினரோடு புற்று நோய் மருத்துவமனை, குழந்தைகள் இல்லம் என போய் கொண்டாடுவார் திரிஷா.
மேலும் பார்ட்டிகளும் அமர்க்களப்படும். ஆனால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை அமைதியாக கழித்தாராம்.
ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தவர் பிறந்த நாளன்று வீட்டுக்கு வந்து வி்ட்டார். அம்மாவுடன் அமைதியாக கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார்.
பார்ட்டி, கொண்டாட்டம் என எதுவும் இல்லையாம்.
இலங்கைத் தமிழர்களுக்காக ரஜினி, கமல், அஜீத் ஆகியோர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டனர்.
அதேபோல திரிஷாவும் தனது பிறந்த நாளை பெரிதாக கொண்டாடவில்லையாம்.
Comments
இலங்கைத் தமிழர்கள் கொண்டாட்டம் சினிமா தமிழ் திரிஷா பிறந்த நாள் ரத்து bash birth day cancelled cinema lankan tamils trisha


Click it and Unblock the Notifications