twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த திரிஷா

    By Staff
    |

    Trisha
    வழக்கமாக சிறப்பாக பிறந்த நாளைக் கொண்டாடும் திரிஷா இந்த ஆண்டு படு கமுக்கமாக இருந்து விட்டார். கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்கவில்லையாம்.

    திரிஷா தனது பிறந்த நாளை வருடா வரும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ரசிகர் மன்றம் வேறு இப்போது இருப்பதால், தனது மன்றத்தினரோடு புற்று நோய் மருத்துவமனை, குழந்தைகள் இல்லம் என போய் கொண்டாடுவார் திரிஷா.

    மேலும் பார்ட்டிகளும் அமர்க்களப்படும். ஆனால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை அமைதியாக கழித்தாராம்.

    ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தவர் பிறந்த நாளன்று வீட்டுக்கு வந்து வி்ட்டார். அம்மாவுடன் அமைதியாக கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார்.

    பார்ட்டி, கொண்டாட்டம் என எதுவும் இல்லையாம்.

    இலங்கைத் தமிழர்களுக்காக ரஜினி, கமல், அஜீத் ஆகியோர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டனர்.

    அதேபோல திரிஷாவும் தனது பிறந்த நாளை பெரிதாக கொண்டாடவில்லையாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X