வாய்ப்பைக் கோட்டைவிட்ட த்ரிஷா!

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என தொடர்ந்து விஜய் ஜோடியாக வந்தவர் வில்லு படத்தை இழந்தார். நயன்தாரா கைக்கு அப்படம் மாறியது. கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக ஆனார். அதன் பிறகு தயாரான அஜீத்தின் ஏகனிலும் இவரே ஜோடி எனக் கூறப்பட்டது. ஆனால் அந்தப் படமும் நயன்தாரா கைக்கு மாறியது.
ரஜினி, கமலுடன் ஜோடி சேருவது நடிகைகளின் கனவு. ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லாத நிலை. ஆனால் அந்தக் குறை மர்மயோகியில் கமலுக்கு ஜோடியாவதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவே நினைத்தார் த்ரிஷா.
மர்மயோகிக்காக பல மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கி நடிக்கத் தயாரானார். ஆனால் அந்த படம் திடீரென்று நின்று போனது.
இப்போது, தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்க கமல் தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'எ வெட்னஸ்டே'யின் ரீமேக்கான இந்தப் படம் விரைவில் படப்பிடிப்புடன் துவங்குகிறது. ஆனால் இந்தப் படத்தில் த்ரிஷா இடம் பெறவில்லை.
மர்மயோகிக்கு தான் கொடுத்த கால்ஷீட்டை இந்தப் படத்துக்கு கமல் பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்த்தார் த்ரிஷா.
ஆனால் அவரோ, ஸ்ரேயா, பத்மப்ரியா என தனது தேடுதலை இன்னும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இதனால் கமல் படத்தில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் த்ரிஷா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இப்போது கெளதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. வாரணம் ஆயிரம் படத்துக்கு முன்பே ரிலீசாகி இருக்க வேண்டிய படம் இது. ஆனால் இன்னமும் இழுபறியாக உள்ளது.
இந்த வேதனையிலும் த்ரிஷாவுக்கு இரு மகிழ்ச்சி செய்திகள்...
தனுஷ் மற்றும் சிலம்பரசனின் அடுத்த படங்களில் ஜோடி த்ரிஷாதானாம்.
வாய்ப்பை கெட்டியா பிடிச்சிக்குங்க...!


Click it and Unblock the Notifications











