த்ரிஷாவின் 'காஸ்ட்லி ஹாபி!'

இப்போதெல்லாம் பார்ட்டி, நைட் கிளப் விவகாரங்களைக் குறைத்துக் கொண்டு, கையில் குவிகிற பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதையே பொழுது போக்காக வைத்துள்ளாராம் த்ரிஷா.
சில மாதங்களாக அவர் மும்பையில் தேடித் தேடி வீடு பார்த்து வருவதாக செய்திகள் வந்தன. ஒருவேளை நிரந்தரமாக மும்பையிலேயே தங்கி விடுவாரோ என்று கேள்வி எழுப்பி வந்தனர் மீடியாவில்.
சமீபத்தில் சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் த்ரிஷாவிடம் இதுபற்றி கேட்டதற்கு அவர் இப்படிச் சொன்னார்:
"நான் சென்னைப் பொண்ணு... மும்பை போற எண்ணமெல்லாம் கிடையாது. ஆனால் நல்லதா வீடுகள் கிடைச்சா வாங்கணும்னு எனக்கு ஆசை. அது ஒரு ஹாபி ஆகிடுச்சி இப்போ. மும்பையில் மூன்று வீடுகள் விற்பனைக்கு வந்தன. நல்ல வீடுகள் என்பதால் உடனே வாங்கிப் போட முடிவு செய்தேன். ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் வாங்க ஆசைப்படுகிறேன். அதேபோல வெளிநாட்டிலும் வீடு வாங்க ஆசை..." என்றார்.


Click it and Unblock the Notifications











