மகேஸ்வரிக்கு கல்யாணம்

உல்லாசம் படத்தின் மூலம் நடிக்க வந்தவர் மகேஸ்வரி. நடிகை ஸ்ரீதேவிக்கு தங்கை முறை இவர். உல்லாசம் படத்திற்குப் பின்னர் பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தின் மூலம் இவருக்குப் பிரேக் கிடைத்தது. ஆனால் பட வாய்ப்புகள்தான் சரியாக இல்லை.
தமிழ் கைவிட்டதால் தெலுங்குப் பக்கம் திரும்பிப் பார்த்தார் மகேஷஸ்வரி. அங்கும் அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லை. இதனால் எந்த மொழியிலும் வாய்ப்பில்லாத நடிகை என்ற பெருமையுடன் வீட்டை வளைய வலம் வருகிறார்.
இந்த நிலையில் மகேஸ்வரிக்கு வீட்டில் கல்யாணம் பேசி விட்டார்களாம். இது காதல் கல்யாணமாம். மாப்பிள்ளை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர்தான் மகேஸ்வரியின் மனம் கவர்ந்த மாப்பிள்ளையாம்.
இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டதால்தற்போது கல்யாணத்திற்கு முடிவு செய்து விட்டனர். விரைவில் திருமணம் நடைபெறுமாம்.
கல்யாணம் வரை சும்மா இருக்கப் பிடிக்காமல் காதல் பறவைகள் உல்லாசமாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றனவாம்.


Click it and Unblock the Notifications











