twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமீர் போக்கு - ஆசின் அப்செட்!

    By Staff
    |

    Asin
    இந்தி கஜினியில் நடிக்கப் போய் இப்போது ஏகப்பட்ட விசனத்தில் இருக்கிறாராம் ஆசின்.

    இந்தி கஜினி குறித்த விளம்பரங்கள், விளம்பர நிகழ்ச்சிகளில் ஆசினை ஆமிர்கான் கண்டு கொள்ளவில்லையாம்.

    இதுதவிர ஆமிர்கான் போட்ட பல நிபந்தனைகளாலும் அவர் படாதபாடு பட்டு வருகிறாராம்.

    இப்படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளாக ஆமிர் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு நடந்ததற்கு இதுதான் ஆமிர் கொடுக்கும் பரிசா என நொந்து போய் உள்ளாராம் ஆசின்.

    கஜினி முடியும் வரை மீடியாவுடன் பேசக் கூடாது, பொது நிகழ்ச்சிகளுக்குப் போகக் கூடாது, வேறு எந்த நிகழ்ச்சிக்கும் போகக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு வைத்திருந்தார் ஆமிர்.

    இதையெல்லாம் ஆசின் ஒன்று விடாமல் சீரியஸாக கடைப்பிடித்து வந்தார்.

    இதை விட மோசமாக, தனது புகைப்படங்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும் ஆசினுக்கு கண்டிஷன் போடப்பட்டதாம்.

    மூச்சுத் திணறடிக்கும் இந்த கெடுபிடிகளால் நொந்து போன ஆசின் ஒரு கட்டத்தில் ஆமிர்கானிடம் பேசி, கொஞ்சமாவது சுதந்திரம் கொடுங்களேன் என்று கெஞ்சும் அளவுக்குப் போனாராம்.

    ஆனால் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகே பேட்டி கொடுக்கலாம், அதுவரை மீடியா வாடையே கூடாது என்று ஆமிர் திட்டவட்டமாக கூறி விட்டாராம். மேலும் தொடர்ந்து இந்தியில் நடிக்க வேண்டுமானால் இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்கவே கூடாது என்றும் ஆசினிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம் ஆமிர்.

    இதனால்தான் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடிக்க வந்த பிரமாண்ட வாய்ப்பை ஆசின் நழுவ விட நேரிட்டதாம்.

    என்ன கொடுமை சார் இது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X