புவனேஸ்வரி இப்போ 'பக்திப் பழம்'!

Bhuvaneswari
விபசார வழக்கில் உள்ளே போய், அதன் எதிரொலியாக திரையுலகமே இரண்டுபடும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்திய புவனேஸ்வரி, சிறையிலிருந்து வந்ததும் ஆள் அடியோடு மாறிவிட்டார்.

எப்போதும் கோயில் குளம் என்றுதான் சுற்றிக் கொண்டிருக்கிறார். எந்தத் திரைப்பட விழாவுக்கும் வருவதில்லை. பட வாய்ப்புகளையும் தற்காலிகமாகத் தவிர்த்து வருகிறாராம்.

இன்னொரு பக்கம் அவரை வைத்து சுயசரிதைப் படம் எடுக்க மூன்று தயாரிப்பாளர்களாய் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்களாம்.

விபசார வழக்கில் இரண்டாவது முறை கைதான போது என்னை மட்டும் ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான் என்று அழுது கண்ணீர் விட்டார்.

சில நாட்கள் புழல் ஜெயிலில் இருந்த போது நலம் விரும்பிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். சொந்த வாழ்க்கையில் நடந்த பரபரப்பான விஷயங்கள் பற்றி சுயசரிதை எழுத முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபற்றி எதுவும் பேச மறுப்பு தெரிவித்து வருகிறார் புவனேஸ்வரி.

சிறையிலிருந்து வெளியில் வந்து சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தவர், இப்போது பர்தா இல்லாமலேயே வெளியில் வரத் துவங்கியுள்ளார்.

பெரும்பாலும் கோயில்களுக்கு மட்டுமே செல்லும் அவர் நீண்ட நேரம் அங்கு பிரார்த்தனை செய்கிறார்.

இதற்கிடையே அவர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் அழைக்கிறார்களாம் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும். கொஞ்சம் பொறுங்க... இன்னும் சில தினங்களில் வந்துவிடுவேன் என்று அவர்களுக்கு மறுமொழி சொல்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X