நடிகை மல்லிகா ஷெராவத்தை கொல்ல சதி செய்தவர் கைது!

அவருடைய பெயர், ராஜேஷ் தலால் (வயது 35). ஜாட் சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக, நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த 2006-ம் ஆண்டில் மும்பையில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
3 வருடங்களுக்குப்பிறகு தேர்வு ஒன்று எழுதுவதற்காக டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் பரோலில் சென்ற ராஜேஷ் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு அறிமுகமான ராஜீவ் என்ற ஜோகிந்தருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.
டெல்லியில் ராஜேஷின் காதலியை கிண்டல் செய்துவந்த ஒருவரை தீர்த்துக்கட்ட அவர்கள் இருவரும் திட்டமிட்டிருந்தனர். இதுபற்றிய ரகசிய தகவலின் பேரில், டெல்லி போலீசார் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications











