திரும்பி வந்த கோபிகா!

கல்யாணமாகி ஒரு 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நடிகையும் வழக்கமாக உபயோகிக்கும் வசனம்தான் இது.
இந்தமுறை உதிர்ந்திருப்பது திருமதி கோபிகா வாயிலிருந்து!.
6 மாதங்களுக்கு முன் டாக்டர் அஜிலேஷ் என்பவருடன் திருமணமாகி ஐஸ்லாந்தில் போய் செட்டிலாகிவிடப் போகிறேன் என்று போனவர், அந்த வேகத்திலேயே கேரளா திரும்பியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு இவர் ஜெயராமுடன் நடித்த வருதே ஒரு பார்யா படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டு, விருது என ராஜ மரியாதை.
இந்த விருதைப் பெற்றுக்கொள்ள கேரளா வந்த திருமதி கோபிகாவுக்கு, மீண்டும் ஐஸ்லநாது போகவே மனசில்லையாம்.
போதாக்குறைக்கு, பல பெரிய வாய்ப்புகள், அஜிலேஷ் வாழ்நாள் பூரா கஷ்டப்பட்டாலும் சம்பாதிக்க முடியாத அளவு சம்பளம் என தமிழ், மலையாள திரையுலகம் ஆசைகாட்ட, இவர் இங்கிருந்தபடியே கணவரிடம் அனுமதி வாங்கிவிட்டாராம்.
புதிதாக இரு மலையாளப் படங்கள், ஏவிஎம் தயாரிக்கும் ஒரு தமிழ் படம் என வாய்ப்புகளை ஒப்புக் கொண்டுள்ளார் கோபிகா.
திருமணமான பிறகும் அழகு குறையாமல் அசத்தலாக இருப்பதால் சோலோ ஹீரோயினாகவே வந்திருக்கிறதாம் எல்லா படங்களிலும், கோபிகாவுக்கு.


Click it and Unblock the Notifications











