ஜெ.வைச் சந்தித்தார் பழம்பெரும் நடிகை காஞ்சனா

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இதுகுறித்து அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில், பழம் பெரும் திரைப்பட நடிகை காஞ்சனா மரியாதை நிமித்தம் அவரை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆஷா ஜெகதீஷ், ஜோதி மஞ்சுநாத்தும் உடனிருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் காஞ்சனா வறுமையில் வாடுவதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. உடனடியாக இந்தச் செய்தியை கடுமையாக மறுத்திருந்த காஞ்சனா, தான் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் காஞ்சனாவை சென்னைக்கு ஜெயலலிதாதான் அழைத்தார் என்று கூறப்படுகிறது.
இருவருக்குமிடையே நடந்த பேச்சு தொடர்பாக எந்தத் தகவலுமில்லை.
Comments


Click it and Unblock the Notifications