மறு கல்யாணமா... !!- அலறும் மீரா

உன்னைச் சரணடைந்தேன், ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்த, மீரா வாசுதேவன், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கணவரை விட்டுப் பிரிந்து, சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெற்றோர்கள் வீட்டில் வசித்து வரும் மீரா வாசுதேவன், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
தனது மறுபிரவேச அறிவிப்பை நிருபர்களைக் கூட்டி அறிவித்த மீரா, கூறியதாவது:
திருமண வாழ்க்கையில் இருந்து விலகி, கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருந்தேன். இந்த வழக்கினால் என் தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
நான், மும்பையில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக ஒரு வதந்தியை பரப்பிவிட்டு இருக்கிறார்கள். அது வெறும் வதந்திதான். அதில் உண்மை இல்லை.
இனிமேல் என் வாழ்க்கையில், குறைந்த பட்சம் 15 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கல்யாணம் பற்றி இனிமேல் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன்.
நான் என் பெற்றோர்களுடன் சந்தோஷமாக இருக்கிறேன். இனிமேல் என்னுடைய ஒவ்வொரு நிமிடமும் சினிமா பற்றிய சிந்தனைதான்.
நான் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் கத்திக் கப்பல்' என்ற படம் எனக்கு ஒரு திருப்பமாக அமையும். இந்தப் படத்தில், கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்கும் பெண்ணாக நடித்து இருக்கிறேன்.
அடுத்து 'நீயே' என்ற புதிய படத்தில் கலெக்டராக நடிக்கிறேன். மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











