முமைத்கானின் அதகளம்!

கவர்ச்சி நடனம் ஆடி வந்த முமைத்கான் இப்போது அதிரடி நாயகியாகியாக அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் முமைத்கான் ஹீரோயின். அவர் முழு முதல் நாயகியாக நடித்த மைசம்மா ஐபிஎஸ் இப்போது அடுத்தடுத்து இரு மொழிகளில் டப் ஆகி முமைத் கானை ஸ்டார் ரேஞ்சுக்குக் கொண்டு போயிருக்கிறது.
காயத்ரி ஐபிஎஸ் என்ற பெயரில் தமிழிலும், ஐஸ்வர்யா ஐபிஎஸ் என்ற பெயரில் இந்தியிலும் மைசம்மாவை டப் செய்துள்ளனர். மைசம்மாவின் கதை, திரைக்கதையை வடிவமைத்தவர் மத்திய அமைச்சராக உள்ள தாசரி நாராயண ராவ்.
காயத்ரி ஐபிஎஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டார்.
மைசம்மாவைப் போல காயத்ரியும் வெற்றி பெற வேண்டும் என வீராசாமி வாழ்த்தினார்.
விஜயசாந்தி ரேஞ்சுக்கு இப்படத்தில் முமைத்கான் கலக்கியுள்ளாராம். அடிதடியில் அதகளம் செய்துள்ள முமைத், கவர்ச்சியிலும் குறை வைக்கவில்லையாம்.
எனது ரசிகர்கள் அடிப்படையில் கிளாமர் விரும்பிகள்தான். எனது கிளாமரைத்தான் முதலில் அவர்கள் ரசித்தனர். இப்போது நான் ஹீரோயினாகி விட்டதால் கிளாமர் பக்கம் நான் கவனம் செலுத்தாமல் விட்டு விட முடியாது. எனவே படத்தில் கிளாமரும் சிறப்பாகவே வந்திருக்கிறது என்கிறார் முமைத்கான்.
பெரிய ஹீரோயின்களின் படத்தைப் போல தனது படமும் அடுத்தடுத்து தமிழ், இந்தியில் டப் ஆவதும் முமைத்துக்கு பெரும் பெருமையைக் கொடுத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











