குஜராத் கலவரம்: நந்திதா தாஸ் இயக்கிய படத்துக்கு விருது

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய திரைப்பட விழா நேற்று முன்தினம் சிங்கப்பூரில் துவங்கியது. 26 நாடுகளைச் சேர்ந்த 600 படங்கள் இதில் பங்கேற்றன. 11 பிரிவுகளில் போட்டியிட்டன.
இவற்றில் இந்தியாவிலிருந்து நந்திதா தாஸ் இயக்கிய ஃபிராக் திரைப்படம் பங்கேற்றது. குஜராத்தில் 2002ல் நடந்த கொடிய மதக் கலவர பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது, சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் வெளிநாட்டு செய்தியாளர் சங்க விருதும் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டது.
ஒரு நடிகையாக அறியப்பட்டு வந்த நந்திதா தாஸ், நடிப்பைக் குறைத்துக் கொண்டு மூன்று ஆண்டுகளாக மிகுந்த கவனத்துடன் எழுதிய ஸ்கிரிப்ட் இது.
இதுகுறித்துப் பேசிய நந்திதா தாஸ், ஒரு இனத்தைச் சேர்ந்த 2,000 பேரை அழிக்கப்பட்டது குறித்த படம் இது. வன்முறை வெறியாட்டம் உறவுகளை எப்படியெல்லாம் குதறிவிடுகிறது என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று.
இன்று தேசம் முழுக்க ஒருவித கோபம், வன்ம உணர்வு நிலவுகிறது. இதுதான் பெரும் வன்முறையாக மாறி மக்களைக் கொல்கிறது, என்றார்.


Click it and Unblock the Notifications











