நயனதாரா தான் ஜோடி!

விஜய் நடிக்கும் புதிய படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடி நயனதாரா. ஆனால் திடீரென நயனதாரா நடிப்பாரா, மாட்டாரா என்ற குழப்பமான தகவல்கள் வெளியாயின. இதனால் நயனதாரா இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் நயனதாரா அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். குசேலன் படத்ைத முடித்து விட்டு வந்துள்ள நயனதாரா, பொள்ளாச்சியில் நடந்து வரும் வில்லு படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்று நடித்தார்.
நயனதாரா நடிப்பது உறுதியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஏற்கனவே விஜய்யும், நயனதாராவும் இணைந்து ஆடிய கோடம்பாக்கம் ஏரியா பாடல் சூப்பர் ஹிட் என்பதால், வில்லு படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்ற உற்சாகத்தில் அவர்கள் உள்ளனர்.
தீபாவளிக்கு வில்லு ரிலீஸாகிறது. அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











