தொடர் தோல்வி... 'விலகும்' நயன்?!

கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்விப் படங்களாகவே அமைந்துவிட்டன நயன்தாராவுக்கு. இன்று தமிழில் புதிய படங்களே அவருக்கு இல்லாத நிலை. சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் வெளியாகிவிட்டால், பின்னர் மோட்டு வளையைப் பார்த்தபடி உட்காந்திருக்க வேண்டியதுதான்.
நம்பர் ஒன் நடிகையாக இருந்தவருக்கு, இன்று இந்த மோசமான நிலை வரக் காரணமே பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதல்தான் என்று நயன்தாராவின் பெற்றோர் அறிவுறுத்தி வருகிறார்களாம்.
தங்களுக்குத் தெரிந்த மாந்த்ரீகர்களை வைத்துப் பார்த்ததில், நயன் இப்போதைக்கு விலகி இருப்பதுதான் கேரியருக்கு சிறந்தது என சொன்னார்களாம்.
பார்த்தோம்... பழகினோம் என்றில்லாமல் காதலிலேயே பைத்தியமாகக் கிடப்பது தொழிலை பாதிக்கும் என தோழிகளும் தொடர்ந்து கூறுவதால், இந்தக் காதலுக்கு சின்ன பிரேக் விடும் யோசனையில் இருக்கிறாராம் நயன்தாரா.
Comments


Click it and Unblock the Notifications