தமன்னாவின் காமெடி

By Staff

Tamanna
சீரியஸ், வில்லி, மென்மையான காதல் என விதம் விதமான ரோல்களில் நடித்துள்ள தமன்னா, படிக்காதவன் படத்தில் முழு நீள காமெடி ரோலில் அசத்தியுள்ளாராம்.

முதல் படமான கேடி படத்திலேயே வில்லத்தனம் செய்து பயமுறுத்தியவர் தமன்னா. அடுத்தடுத்து வந்த படங்களில் கிளாமர், கல்லூரி மாணவி என வந்து போன அவர் முதல் முறையாக படிக்காதவன் படத்தில் முழு நீள காமெடியில் அசத்தியுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் முறையாக காமெடி ரோல் செய்கிறேன். மற்ற எந்த ரோலையும் எளிதில் செய்து விடலாம். ஆனால் காமெடிதான் சற்று கஷ்டமானது. அவ்வளவு எளிதில் அது வந்து விடாது.

இப்படத்தில் எனக்கு வித்தியாசமான கேரக்டர். அருமையாக வந்துள்ளது. ரசிகர்கள் என்னையும் இனி கவனிப்பார்கள் என்கிறார் தமன்னா.

ஆனந்த தாண்டவம் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளாராம் தமன்னா. அற்புதமான அனுபவம் இந்தப் படம் என்று கூறும் தமன்னா, படத்தின் கிளைமாக்ஸ் அனைவரையும் நெகிழ வைத்து விடும் என்கிறார். என்ன மாதிரியான கிளைமாக்ஸ் என்றால் அதெல்லாம் இப்பவே சொல்லப்படாது என்று செல்லமாக கண்டித்தார்.

தமன்னா கையில் நிறையப் படங்கள் இருக்கிறதாம். இதில் முக்கியமானது சூர்யாவுடன் நடிக்கும் அயன். 2009ம் ஆண்டு முடிய கால்ஷீட் இல்லையாம்.

சரி தமன்னாவின் லட்சியம்? வேறென்ன கமலுடன் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும். அதுதான் எனது முக்கியமான ஆசை. கமலைப் போன்ற சிறந்த நடிகர்களுடன் ஒரே ஒரு படத்தில் நடித்தால் கூட போதும், நிறையக் கற்றுக் கொண்டு விடலாம், சிறந்த நடிகையாக மாறி விடலாம் என்கிறார் தமன்னா, கண் நிறைய ஏக்கம் பறக்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X