'மாரி' பார்வதி படிப்பில் பிசி!

By Staff

Parvathy
பூ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்புப் பூகம்பத்தை கிளப்பி விட்டுள்ள மலையாள நாயகி பார்வதி, படத்தின் வெற்றியால் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் மார்ச் மாதம் வரப் போகும் செமஸ்டர் தேர்வுக்காக மும்முரமாக படிக்கப் போய் விட்டார்.

மலையாளத்தில் நோட்புக் என்ற படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்தான் பார்வதி. தமிழில் பூ படம் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

முதல் படத்திலேயே அவர் நடித்த மாரி கேரக்டர் சூப்பர் ஹிட் ஆகி விட்டது. பார்வதி மீது நல்ல நடிகையாக தெரிகிறாரே என்ற வெளிச்சம் விழுந்துள்ளது.

ஆனால் பார்வதிக்கு இந்த வெற்றியால் எந்த பிரமிப்பும் இல்லையாம். நான் ஒரு நடிகை, நடிகை என்றால் கொடுத்த கேரக்டரை அப்படியே பிரதிபலிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நான் பூ படத்தில் நடிக்கும் முன்பே அந்தக் கேரக்டரை உள்வாங்கி விட்டேன். படப்பிடிப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ராஜபாளையம் போய் அங்குள்ள பேச்சு வழக்கு, பழக்க, வழக்கங்கள் உள்ளிட்டவற்றை கிரகித்துக் கொண்டேன். இதனால்தான் என்னை எல்லோரும் அந்தப் படத்தில் மாரியாக பார்க்க முடிந்தது என்கிறார் பார்வதி.

பார்வதிக்கு குண்டக்க மண்டக்க படங்களில் நடித்து குவிக்கும் ஆர்வம் இல்லையாம். எனக்கு நடிப்புக்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே அந்தப்படத்தில் நடிப்பேன். காமா சோமா நடிப்பெல்லாம் எனக்குப் பிடிக்காது என்கிறார்.

பூ படத்தின் வெற்றியை கொச்சியில் உள்ள தனது வீட்டிலிருந்தபடி அனுபவிக்கும் பார்வதிக்கு அதை விட முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அது செமஸ்டர் தேர்வு.

ஆம், பார்வதி ஒரு கல்லூரி மாணவி. மார்ச் மாதம் செமஸ்டர் தேர்வு வருகிறதாம். இதனால் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறாராம்.

இதுதான் மலையாள நடிகைகளுக்கும், மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X