'பிகினி' பிரியா!

பருத்தி வீரனை முடித்த கையோடு கிராமத்துப் பெண் கேரக்டர்களுக்கு குட்பை சொல்லி விட்டார் பிரியா மணி. இனிமேல் கிளாமர், கூடுதல் கிளாமர் வேடங்களில் தான் நடி்பேன் என்ற முடிவில் இருக்கிறார். அதற்கேற்றார்போல கிளாமர் படங்களாகவே அவருக்கு வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
தமிழில் தோட்டா படத்தில் கவர்ச்சி புல்லட்டாக மாறி ரசிகர்களை பரவசப்படுத்தினார். விஷாலுடன் மலைக்கோட்டை படத்திலும் கவர்ச்சியில் லயிக்க வைத்தார்.
இப்போது தெலுங்கில் துரோணா என்ற படத்தில் பிகினிக்கு மாறி கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளாராம். தமிழை விட கூடுதல் கவர்ச்சியில் தெலுங்கில் நடிக்க பிரியா மணி முடிவு செய்தவுடனேயே வந்த படம்தான் துரோணா.
இப்படத்தில் பிகினியில் வர வேண்டும் என இயக்குநர் கேட்க, சற்றும் ஜெர்க் ஆகாமால் ஓ.கே.சொன்னாராம் பிரியா.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் வைத்து பிரியா மணியின் பிகினி சீனை கச்சிதமாக எடுத்து முடித்து விட்டனராம்.
படப்பிடிப்பின்போது படு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனவாம். யாரும் ரகசியமாக படம் பிடித்து விடக் கூடாது என்று கண் கொத்திப் பாம்பாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாம்.
பிரியா மணி இந்தக் காட்சியில் செம கிளாமராக தோன்றுகிறாராம். சென்சாருக்குத் தப்பி வந்தால், இந்தக் காட்சிக்கு ஆந்திராவில் அமோக வரவேற்பு கிடைக்கும், பிரியா மணிக்கு பிரேக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறதாம்.
படம் தமிழுக்கு டப் ஆகி வரும்ல?


Click it and Unblock the Notifications











