மல்லிகாவை 'காத்த' ரஜினி

By Staff

Karunanidhi, Jackie Chain and Mallika Sherawat
முதல்வர் பங்கேற்ற விழாவில் கவர்ச்சி உடையில் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் கவர்ச்சி 'மல்லி', சூப்பர் ஸ்டாரின் ஆசியால் தப்பித்த கதைதான் கோலிவுட்டை கலகலக்கும் லேட்டஸ்ட் டாக்.

கமல் நடித்த தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. முதல் ஆடியோ சிடியை முதல்வர் வெளியிட ஹாலிவுட் ஆக்ஷன் கிங் ஜாக்கி சான் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில், நடிகை மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற 'சீ-த்ரு' கவுன் அவரது முதுகை அப்பட்டமாக காட்டியது. இதனால் எழுந்த பெரும் சர்ச்சையை அடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக ஷெராவத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் உள்பட பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் முன்னிலையில் மரியாதைக்குறைவாக கால்மேல் கால் போட்டு அமர்ந்தும், கவர்ச்சியாக ஆடை அணிந்தும் இருந்த மல்லிகா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்து மக்கள் கட்சி போலீசில் புகாரும் செய்தது.

இந்த எதிர்ப்பை எதிர்பாராத மல்லிகா கலங்கிப் போய்விட்டார். வேறுவழியில்லாவிட்டால் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்ற முடிவிலிருந்த மல்லிகாவுக்கு, அவரே சற்றும் எதிர்பாராத ஒரு மிகப் பெரிய இடத்திலிருந்து அபயக்கரம் நீண்டது. அதுதான் தமிழகத்தின் பவர்ஹவுஸ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர்தான் இந்துமத அமைப்புகளிடமும் இதர ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானப்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.

ஜாக்கிசானைப் போல மல்லிகாவையும் அந்த விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினராக கருதி இந்த பிரச்னையை மேற்கொண்டு ஜவ்வாக இழுக்காமல் வி்ட்டுவிடுமாறு தலைவர்களுக்கு அன்புக்கட்டளை இட்டாராம் ரஜினி.

இதன்பிறகே இந்த விவகாரம் அடங்கியதாகத் தெரிகிறது. ரஜினியின் உதவிக்கு மறக்காமல் நன்றியும் தெரிவித்துள்ளார் மல்லிகா.
இதேபோல் 'சிவாஜி' விழாவில் படத்தின் நாயகி ஸ்ரேயா கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தபோதும் எழுந்த சர்ச்சையிலும் ரஜினிதான் முதல்வரிடம் பேசி போலீசாரின் வேகத்தைக் குறைத்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த செய்தி எதையும் சூப்பர்ஸ்டார் தரப்பில் உறுதிசெய்ய மறுக்கிறார்கள்.

கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா, 'கொஞ்சம் அடங்குங்கம்மா'.
இது எப்டி இருக்கு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X